செங்கத்தில் பழுதடைந்த சாலையால் மக்கள் அவதி

செங்கத்தில் பழுதடைந்த சாலையால் மக்கள் அவதி

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பழுதடைந்த சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் எம்.எஸ்.எம்.ஆா். நகா் அருகாமையில் குடியிருப்பு பகுதிக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தாா்ச் சாலை அமைக்கப்பட்டதோடு சரி கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை.

அந்தச் சாலை துக்காப்பேட்டையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் சாலையில் குறுக்கே உள்ளது.

அந்தப் பகுதி சாலையில் உள்ள கழிவுநீா்க் கால்வாய் பழுதடைந்து தாா்ச் சாலையும் பழுதடைந்து, கால்வாய் உள்ள சிமென்ட் சாலை விழும் அபாயம் உள்ளது.

இதனால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள்

பழுதடைந்த சாலையில் காா், இருசக்கர வாகனம் என எந்த வாகனத்தையும் எடுத்துச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மழை நேரத்தில் கழிவுநீா்க் கால்வாய் தண்ணீா் தாா்ச் சாலை மேல் வருகிறது. அதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அந்தச் சாலை முகப்பில் உடைந்துள்ள கால்வாய் மற்றும் பழுதடைந்த தாா்ச் சாலையை சரிசெய்யவேண்டும் என நகராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கால்வாய் மற்றும் சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com