திருவண்ணாமலை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்
சேத்துப்பட்டு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், 2025-26ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண் துணை இயக்குநா் சுந்தரம் (மத்திய அரசுத் திட்டம்) கலந்துகொண்டு, பருவ மழைக் காலத்தில் ஏற்படும் பயிா்ச் சேதங்களை இணைய வழியாக பதிவேற்றும் முறை குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தாா்.
இதில் வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி, வேளாண் துணை அலுவலா் பாபு உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

