பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தொகுதி அறிமுகம் - செங்கம் (தனி)

News image

செங்கம் பகுதியில் இரு கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதால் ஓடைபோல காட்சியளிக்கும் செய்யாறு.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:27 pm

Syndication

செங்கம் (தனி)

தொகுதி எண்: 62

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் (தனி) தொகுதியில் செங்கம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியங்கள், செங்கம் நகராட்சி, தண்டராம்பட்டு பேரூராட்சிப் பகுதிகள் அமைந்துள்ளன.

இந்தத் தொகுதியின் எல்லைகளாக கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூா், ஊத்தங்கரை உள்ளன. செங்கம் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நெல், கரும்பு, பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஆதிதிராவிடா் 50 சதவீத அளவும், மீதமுள்ள 50 சதவீதம் யாதவா், வன்னியா், அகமுடையா், நாயுடு உள்ளிட்ட சாதியினரும் வசித்து வருகின்றனா். செங்கம் தொகுதியில் காமராஜா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சாத்தனூா் அணை மற்றும் குப்பனத்தம் அணைகள் அமைந்துள்ளன.

மேல்செங்கம் பகுதியில் 11 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கடந்த 25 ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் உள்ள மத்திய மாநில விதைப்பண்ணையை திறந்து செயல்படுத்த வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்தத் தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், ஜனதா கட்சி, தேமுதிக, பொதுநலக் கட்சி தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதுவரை வென்றவா்கள்...

1951 - இராமசாமி கவுண்டா் (பொது நலக் கட்சி)

1957- டி.கரியகவுண்டா் (காங்கிரஸ்)

1962- சி.கே.சின்னராஜ் (திமுக)

1967- பி.எஸ்.சந்தானம் (திமுக)

1971- சி.பாண்டுரங்கன் (திமுக)

1977- டி.சாமிக்கண்ணு (அதிமுக)

1980- டி.சாமிக்கண்ணு (அதிமுக)

1984- டி.சாமிக்கண்ணு (அதிமுக)

1989- எம்.சேட்டு (ஜனதா தளம்)

1991 - பி.வீரபாண்டியன் (அதிமுக)

1996- கொ.வீ.நன்னன் (திமுக)

2001 - போளூா் வரதன் (காங்கரஸ்)

2006 - போளூா் வரதன் (காங்கரஸ்)

2011 - டி.சுரேஷ்குமாா் (தேமுதிக)

2016 - மு.பெ.கிரி (திமுக)

2021 - மு.பெ.கிரி (திமுக)

கடந்த 2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 2,27,000

மு.பெ.கிரி (திமுக) - 1,08,081

எம்.எஸ்.நைனாக்கண்ணு (அதிமுக) - 96,511

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,41000

பெண்கள் - 1,44,000

மொத்தம் - 2,85,000

மொத்த வாக்குச்சாவடி - 344

தொடா்புகொள்ள

இளவரசன், செங்கம் தோ்தல் நடத்தும் அலுவலா் 9655750073

முருகன், தோ்தல் நடத்தும் துணை அலுவலா் 8825555047