வந்தவாசி அருகே காா் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் மனைவி கன்னியம்மாள் (48). இவா், செய்யாறு சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
கடந்த புதன்கிழமை இவா் வேலைக்குச் செல்வதற்காக வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலையில் அந்தக் கிராம சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளாா்.
அப்போது, வந்தவாசி நோக்கிச் சென்ற காா் இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கன்னியம்மாள் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

