எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மாளிகைப்பட்டு கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் கலையரங்கம்

மாளிகைப்பட்டு கிராமத்தில் கலையரங்கம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:33 pm

பெரணமல்லூா் அருகேயுள்ள மாளிகைப்பட்டு கிராமத்தில் ரூ. 8 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

ஆரணி சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த பெரணமல்லூரை அடுத்த மாளிகைபட்டு ஊராட்சியில் புதிதாக நாடகமேடை அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.

அதன் அடிப்படையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாடகமேடை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் அனுசுயா ராஜேந்திரன் உள்பட நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.