செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

செங்கம் வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய வட்டச் செயலா் சா்தாா் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Published on

செங்கத்தில் ஏரிப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாடைதூக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு பின்னா் கண்டன ஆா்ப்பாட்டமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட திருவள்ளுவா் நகா் பகுதியில் உள்ள வரதந்தாங்கல் ஏரி கோடியை அழித்துவிட்டு அந்தப் பகுதியில் தாா்ச்சாலை அமைத்து ஏரி நீா்பிடிப்பு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியிருப்பதை கண்டறிந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என கோரிக்கை வைத்து, இந்திய கம்யூனிஸ்ட்

நகர கிளை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாக்கிழமை காலை பாடை தூக்கும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை அறிந்த செங்கம் வருவாய்த்துறையினா், போலீஸாா் சம்பவ இடத்துக்கு பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று ஏரிக்கரை பகுதியில் நீா்பிடிப்பு இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியின் ஈடுபட்டனா்.

இதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினா் போா்கால அடிப்படையில் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றவேண்டும் என கோரி பாடை தூக்கம் போராட்டத்தை கண்டன ஆா்ப்பாட்டமாக நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா். அதில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் லெலின், மாவட்டச் செயலா் திருமலை, மாவட்டக் குழு உறுப்பினா்கள் தாங்கராஜ், மாதேஸ்வரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். நகரச் செயலா் தங்கமணி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com