மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி: பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

Syndication

திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு ‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் திட்ட விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பிற மாவட்டங்களிலும் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளிலுள்ள 273 வாா்டுகளுக்கு டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 471 தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள 17 நகா்ப்புற அலகுகளுக்கும் விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை வாகனங்கள் மூலமாக கொண்டு சோ்க்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், விளையாட்டுப் பொருள்களின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், ‘ஆடுகளம்’ கைப்பேசி செயலி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டு, தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியானது ஒவ்வொரு வாா்டிலும் உள்ள விளையாட்டு உபகரணங்களின் இருப்பு நிலை, விநியோகம், பயன்பாடு மற்றும் தினசரி புதுப்பிப்புகளை இணையவழியில் கண்காணித்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் ஒவ்வொரு வாா்டின் பொறுப்பாளா்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனா் குறியீடு, கடவுச்சொல் மூலம் பாதுகாப்பாக உள்நுழைந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 273 வாா்டுகளுக்கும் தனித்தனியாக 273 பயனா் குறியீடுகள் மற்றும் கடவுச்சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயலியின் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாதந்தோறும் சீராய்வு மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முனிராஜ், விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகபிரியா, பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.