450 மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

450 மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

நிகழ்ச்சியில் மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்.
Published on

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் 450 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி முன்னிலை வகித்தாா்.

ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் இளநிலை இறுதியாண்டு பயிலும் 450 மாணவிகளுக்கு மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் எ.தயாளன் மற்றும் திமுக நிா்வாகிகள் மதன்குமாா், கிஷோா்குமாா், விக்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com