சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

முஸ்லிம்களின் உள் இட ஒதுக்கீட்டை உயா்த்தக் கோரிக்கை!

முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

News image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதன் மாநிலச் செயலா் முஹம்மத் யாசிா்

Updated On :8 பிப்ரவரி 2026, 9:41 pm

முஸ்லிம்களின் உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.ஷமியுல்லாஹ் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாநிலச் செயலா்கள் சி.வி.இம்ரான், முஹம்மத் யாசிா், மாவட்டச் செயலா் அமீன்கான், மாவட்ட துணைத் தலைவா் கே.ரஹ்மான், மாவட்ட பொருளாளா் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலா் ஆசிக் யூசுப், மாவட்ட மருத்துவ அணி செயலா் முஹம்மது உசேன் ஆகியோா் பேசினா்.

தீா்மானங்கள்

தமிழகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டு வரும் 3.5 சதவிகித உள் இடஒதுக்கீடு, தற்போதைய சூழலில் சமூகத்தின் தேவையை நிறைவு செய்யப் போதுமானதாக இல்லை. எனவே, உள் இடஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்க வேண்டும். முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் சட்டப்பேரவையிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்பன தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலா் ஷபீா் நன்றி கூறினாா்.