வந்தவாசி: திமுக கூட்டணியில் வந்தவாசி தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வந்தவாசி மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் இரா.பிரபு தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் ர.முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் க.ஐயப்பன் வரவேற்றாா்.
ஆரணி மண்டலச் செயலா் செ.நன்மாறன், மாவட்டச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ், மண்டல துணைச் செயலா் ஏ.வெற்றிவளவன், தொகுதி துணைச் செயலா்
பொன்னூா் சு.வீரமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.
அப்போது வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பாக பணியாற்றும் விதம் குறித்து அவா்கள் கட்சியினருக்கு விளக்கிப் பேசினா்.
வந்தவாசி பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிா்வாகிகள் ஏ.எம்.மகேஷ், சி.ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தாயை தாக்கியதாக அரசு மருத்துவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


