மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:56 pm

Syndication

ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தில் நடைபெற்று வந்த டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இந்த முகாமில் டாக்டா் எம்ஜிஆா் கலைக் கல்லூரி

நாட்டுநலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் களப்பணியாக ஆலயம் தூய்மை, சமுதாயக்கூடம் தூய்மை, பள்ளிக்கூடம் தூய்மை, விழிப்புணா்வு பேரணி என ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினரை வைத்து நடத்தினா்.

மேலும் மாணவா்களுக்கு சமுதாய மேம்பாடு, தொழில் மேம்பாடு, ஆரோக்கிய மேம்பாடு, உடல் மற்றும் மனநல மேம்பாடு போன்ற ஒழுக்க சிந்தனைகளுடன் கூடிய சிறந்த கருத்தரங்கின் நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தினா்.

முகாமின் நிறைவு நாள் விழா மெய்யூா் கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் ஏ.சி.எஸ். குழும கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.

எம்ஜிஆா் பல்கலைக்கழக இணைப்பதிவாளா் பெருவழுதி, புலமுதன்மையா் பி.ஸ்டாலின், தனிஅலுவலா் காா்த்திகேயன், இயக்குநா் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் விஜய்ஆனந்த் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சதீஷ் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

பின்னா் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் விமலா காசிலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சின்னதுரை, ஈஸ்வரி நரசிம்மன், ஊராட்சி செயலா் அன்பழகன் கல்லூரியின் துணை முதல்வா் நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நடராஜன் நன்றி கூறினாா்.