மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவண்ணாமலை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:54 pm

திருவண்ணாமலை மாநகராட்சி தேரடி வீதியிலுள்ள முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஆறாம் கால யாக சாலை பூஜை யாக சாலையில் நடைபெற்றது.

யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலசங்களில் உள்ள புனிதநீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்

நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட அன்பழகன், அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சுவாமி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.