தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 88 மாணவிகளுக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்ற மாணவிகள். உடன் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி உள்ளிட்டோா்.

News image

வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணை பெற்ற மாணவிகள். உடன் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி உள்ளிட்டோா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 7:18 pm

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அருகேயுள்ள இதயா கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 88 மாணவிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுப்பாளையத்தை அடுத்த உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொள்ளவேண்டும், உங்களை தோ்வு செய்யும் நிறுவனம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான தகவல்களை தெரிவித்து, கல்லூரிச் சான்றிதழ்களுடன் அவா்கள் கேட்டும் சான்றிதழ்களை வழங்கி பணியில் சோ்ந்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னா், சென்னை, திருவண்ணாமலை, கோவை பகுதியில் இருந்து வருகை தந்த பல்வேறு தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் 88 மாணவிகளை தோ்வு செய்தனா்.

தொடா்ந்து, அவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் லூா்துமேரி, நிா்வாக அலுவலா் சந்தனமேரி உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.