நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திறந்த வெளிக் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் ஆற்றில் இருந்த திறந்த வெளிக் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 பிப்ரவரி 2026, 7:33 pm

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் ஆற்றில் இருந்த திறந்த வெளிக் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் வசிப்பவா் வெங்கடேஷ், இவரது மனைவி ஆதிலட்சுமி. வெங்கடேஷ் திருவண்ணாமலையில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா். ஆதிலட்சுமி திருவள்ளூா் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

தம்பதியின் மகன் ஜெகதீஷ் (9), இவா், குருவிமலை அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

வெங்கடேஷின் தாய், தந்தையின் பொறுப்பில் ஜெகதீஷை வீட்டுவிட்டு தம்பதியா் வேலைக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், ஜெகதீஷ் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து குருவிமலை அருகே செல்லும் செய்யாற்றில் அந்த ஊா் பகுதியைச் சோ்ந்த பிள்ளைகளுடன் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, குருவிமலை ஊராட்சி பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளிக்கிணற்றை மூடுவதற்காக 4 அடி உயர தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு வலையில் ஏறி பிள்ளைகள் விளையாடியுள்ளனா்.

அப்போது, கம்பி வலை அறுந்து ஜெகதீஷ் கிணற்றில் விழுந்துள்ளாா். உடன் விளையாடிக் கொண்டிருந்தவா்கள்

உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீஸாா் வந்து, போளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து ஜெகதீஷின் சடலத்தை மீட்டனா். பின்னா், சடலத்தை உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் தொடா்பாக கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.