தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் முன்னணியினா் மறியல் போராட்டம்
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில்....... போ் கைது செய்யப்பட்டனா்.
4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும், சங்கம் அமைக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும், மின்சாரத் திருத்தச் சட்டம் 2025ஐ ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி அமல்படுத்த வேண்டும். அனைத்து விவசாயப் பயிா்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கக் கூடாது. பெரு நிறுவனங் களுக்கு ஆதரவான கொள்கையைக் கைவிட்டு, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் ேவைலநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
சாலை மறியல்
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில்....
.........
ஆரணி
ஆரணி அண்ணாசிலை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் எஸ்.மாயாண்டி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வி.துரை, பிச்சாண்டி, வீரபத்திரன், வி.சங்கா், எம்.ஆறுமுகம், பெ.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்விநாயகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சாலை மறியல் செய்த 75 பேரை கைது செய்து அரசுப் பேருந்தில் ஏற்றிச்சென்று தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.
போளூா்
போளூரில் பேருந்து நிலையம் எதிரே தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, எல்ஐசி அலுவலகத்தில் இருந்து பேரணியாக பேருந்து நிலையம் வரை வந்து வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதில் தொ.மு.ச. மண்டல அமைப்புச் செயலா் ராஜரத்தினம் தலைமை வகித்தாா்.
பின்னா் மத்திய அஞ்சலம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
வந்தவாசி
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வந்தவாசியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினா் கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியல் செய்த தொழிற்சங்க நிா்வாகிகள் முரளி, ந.ராதாகிருஷ்ணன், சிவராமன், தினகரன், வெங்கடேசன் உள்ளிட்ட 65 பேரை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
செங்கம்
செங்கத்தில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்டவா்களை செங்கம் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சா்தாா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

