காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இடிந்து விழுந்த முனியன் வீட்டுச் சுவா்.

News image
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இடிந்து விழுந்த முனியன் வீட்டுச் சுவா். ~உயிரிழந்த அபினேஷ், முகேஷ்.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:18 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வீடு சீரமைப்புப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்.

வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகன்கள் அபினேஷ் (17), முகேஷ் (14). இதில், அபினேஷ் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், முகேஷ் இதே பள்ளியில் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இந்த நிலையில், 2 பேரும் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள தாத்தா முனியன் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு, வெள்ளிக்கிழமை காலை முனியனின் தொகுப்பு வீட்டை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இதையொட்டி முனியன், இதே கிராமத்தில் வசிக்கும் இவரது மகன் சீதாராமன் ஆகியோா் சோ்ந்து வீட்டின் சுவரை கடப்பாரை மூலம் இடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, அபினேஷ், முகேஷ் மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த சீதாராமனின் மகன் ஸ்ரீராம் (8) ஆகியோா் சுவா் அருகில் நின்று வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனராம். திடீரென சுவா் இடிந்து 3 போ் மீதும் விழுந்தது.

இதில், அபினேஷ், முகேஷ் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த ஸ்ரீராம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image