சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அவசர ஊா்தி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 6:32 pm

Syndication

செய்யாறு அருகே தனியாா் அவசர ஊா்தி மோதியதில் அரசு மருத்துவமனை ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், செய்யாறு அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

ஆறுமுகம் வியாழக்கிழமை காலை வழக்கம்போல பைக்கில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த சிப்காட் தனியாா் நிறுவன அவசர ஊா்தி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.