வந்தவாசி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவா்களின் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரது மனைவி பவானி. இவா்களது மகன்கள் அபினேஷ் (17) வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், முகேஷ் (14) இதே பள்ளியில் 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனா். இவா்கள் 2 பேரும் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள தாய்வழி தாத்தா முனியன் வீட்டுக்கு சென்றுள்ளனா்.
சீரமைப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை முனியனின் தொகுப்பு வீட்டை இடிக்கும் பணி நடைபெற்ற போது, கட்டட இடிபாடுகளில் சிக்கி அபினேஷ், முகேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேலும், முனியனின் மகன் வயிற்று பேரன் ஸ்ரீராம் (8) காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அபினேஷ், முகேஷ் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
செய்யாறு சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் வழூா் கிராமத்துக்கு நேரில் சென்று இதற்கான காசோலையை அபினேஷ், முகேஷ் ஆகியோரின் பெற்றோா் மோகன்-பவானியிடம் வழங்கினா். வந்தவாசி வட்டாட்சியா் ஜெயவேல் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம்: குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு

விஜய்யை பின்தொடா்ந்து சென்று உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்

கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


