மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத சனி மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, பெரிய நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற சந்தன அபிஷேகம்.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:41 pm

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மாசி மாத சனி மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக் கூடிய அருணாசலேஸ்வரா் திருக்கோயில் 5-ஆம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தையொட்டி, அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1,500 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து பல்வேறு மலா்களாலான மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டும், சங்கொலி முழங்க சுவாமி தரிசனம் செய்தனா்.