மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற, பெரணமல்லூா் அரசுப் பள்ளி மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் சக ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்தினா்.
பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.
இதன் மூலம் இந்த மாணவா்கள் வருகிற 16-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) கலைவாணன் மற்றும் சக ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.
மேலும், 2025 - 2026 கல்வி ஆண்டுகளில் தடகள குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 45 மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளித்த உடல் கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வியாசிரியா் ஜெயகாந்த் மற்றும் குணசேகா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


