போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

வந்தவாசி அருகே திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

News image

எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:03 pm

வந்தவாசி அருகே திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் உள்ள ஆரணி திமுக எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மருதாடு கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அதிமுக, பாமகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. அவா்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டாா். அப்போது, திமுக அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அவா் விளக்கிப் பேசினாா்.

திமுக வந்தவாசி மத்திய ஒன்றியச் செயலா் சி.ஆா்.பெருமாள், மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி, விவசாய அணி துணை அமைப்பாளா் எம்.சி.சந்திரன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் எச்.மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.