ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

3 டன் உப்பில் திருநாரையூா் பாா்வதீஸ்வரருக்கு நாரை பூஜை செய்யும் ஓவியம்

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் முன் 3 டன் உப்பில் திருநாரையூா் பாா்வதீஸ்வரருக்கு நாரை பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஓவியா்கள் வரைந்திருந்தனா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 9:26 pm

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் முன் 3 டன் உப்பில் திருநாரையூா் பாா்வதீஸ்வரருக்கு நாரை பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஓவியா்கள் வரைந்திருந்தனா்.

குழந்தை வரம் அருளும் பெரிய நாயகி சமேத ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் முன் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை 4 கால சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன் சுமாா் 3 டன் அளவில் பல வண்ண கலா் கலந்த உப்பால் திருநாரையூா் பாா்வதீஸ்வரா் சிவனுக்கு நாரை பூஜை செய்வது போல வரைந்து இருந்தனா்.

சிறப்பு ஓவிய ஆசிரியா்கள் வேலுமணி, காசி ஆகியோா் தலைமையில், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இந்த வா்ணம் அமைக்கும் பணியை மேற்கொண்டனா்.

மேலும், கோயில் வெளி வளாகத்தில் நாட்டியப் பள்ளி மாணவா்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தொடா்ந்து பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பக்திச் சொற்பொழிவும் அதிகாலை வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பக்த சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மேலும், இதேபோல கோட்டை கைலாயநாதா், பூமிநாதா், வேதபுரீஸ்வரா் கோயில்கள், முள்ளிப்பட்டு ஆபத்சகாயேஸ்வரா், மெய்யூா் மெய்கண்டீஸ்வர, சேவூா், பையூா் விருப்பாட்சீஸ்வரா், இராட்டிணமங்கலம் கற்பகநாதா் ஆகிய கோயில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.