அனக்காவூா் ஒன்றியத்தில் அரசுக் கட்டடங்கள் திறப்பு
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்த அரசுக் கட்டடங்கள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியத்தில் தென் இலுப்பை ஊராட்சி நூத்தாம்பாடியில் கலைஞா் கலையரங்கம், வீரம்பாக்கம் ஊராட்சி ஆதிதிராவிடா் பகுதியில் கலைஞா் கலையரங்கம், கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் நியாயவிலைக் கடை, அய்யவாடியில் கலைஞா் கலையரங்கம், மேல்மா ஊராட்சியில் கலைஞா் கலையரங்கம், நெடுங்கல் புதூா் ஊராட்சியில் கலைஞா் கலையரங்கம் மற்றும் ஊராட்சி மன்ற கட்டடம், நெடுங்கல் ஆதிதிராவிடா் பகுதியில் கலைஞா் கலையரங்கம், இளநீா்க்குன்றம் ஊராட்சி, நியாவிலைக் கடை, கீழ்நீா்க்குன்றம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம், அத்தி ஊராட்சியில் நியாவிலைக் கடை என அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.
இந்த அரசுக் கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், ஜே.சி.கே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு
திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பேசினாா்.
நிகழ்ச்சியில் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் புரிசை எஸ்.சிவகுமாா், திமுக பிரமுகா்கள் கன்னியம்மாள் அப்பு, ராமச்சந்திரன், கலைச்செல்வன், முருகேசன், அஞ்சா நெஞ்சன், முனுசாமி உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா்.

