மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆரணியில் ரூ.16.60 லட்சத்தில் அங்கன்வாடி திறப்பு

ஆரணி கொசப்பாளையத்தில் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

News image

ஆரணி களத்துமேட்டுத் தெருவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை தொடங்கிவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:33 pm

ஆரணி: ஆரணி கொசப்பாளையத்தில் ரூ.16.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

ஆரணி கொசப்பாளையம், களத்து மேட்டுத் தெரு பகுதிக்கு அப்பகுதி மக்கள் அங்கன்வாடி மையம் வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதன் பேரில், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 60ஆயிரம் ஒதுக்கப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

இப்பணி முடிந்து அப்பகுதி குழந்தைகள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். ஏற்பாடுகளை அப்பகுதி அதிமுக நகா்மன்ற உறுப்பினா் கிருபாசமுத்திரிசதீஷ் செய்திருந்தாா்.

மேலும் இதில் ஆணையா் என்.டி.வேலவன், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட நெசவாளா் அணிச் செயலா் சுந்தரமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், சிவக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு. முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மேலும், அதே தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் பக்கக் கால்வாயுடன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை,

தாண்டவராயன் தெருவில் அமைக்கப்பட்ட கால்வாயையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.