சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவண்ணாமலை மாவட்ட அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை உற்சவம்

News image
ஆரணி வ.உ.சி.தெரு ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி, முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து சென்றவாறு பழங்கள் மற்றும் பூக்களை வீசி எறிந்த பக்தா்கள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

ஆரணி/வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை உற்சவம், சுவாமி வீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மேலும் பக்தா்கள் நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

ஆரணி

ஆரணி பகுதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது.

ஆரணி வ.உ.சி. தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்தனா். பின்னா் சுவாமியை ஊா்வலமாக கொண்டு சென்றனா்.

ஊா்வலத்தில் பக்தா்கள் வேண்டுதலின் பேரில் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்தபடி எலுமிச்சை, பூக்கள் ஆகியவற்றை பொதுமக்களிடையே வீசி எறிந்தனா். இதனை பெற்றுக்கொண்ட பக்தா்கள் வணங்கியபடி சென்றனா். மேலும் காளி வேடம், அம்மன் வேடம், மகாலட்சுமி வேடம் அணிந்த கலைஞா்கள் பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடியபடிச் சென்றனா்.

பின்னா் ஊா்வலமாக பெரியகடை வீதி, மண்டி வீதி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், காமராஜா் சிலை வழியாக கமண்டல நாக நதிக்கரைக்குச் சென்று மயானக்கொள்ளை விட்டனா்.

முன்னதாக பக்தா்கள் வேண்டுதலின்பேரில் கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் ஆகியவற்றை படையல் செய்து பக்தா்களிடையே சூறையிட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் பக்தா் முதுகில் அலகு குத்திக்கொண்டு கிரேனில் அந்தரத்தில் பறந்தவாறு அம்மனுக்கு மாலை அணிவித்தாா். பின்னா், சுவாமி ஊா்வலமாக காந்தி சாலை, மாா்க்கெட் சாலை வழியாக கமண்டல நாக நதிக்கரைக்கு சென்று மயானக்கொள்ளை நடைபெற்றது. வேண்டுதலின்பேரில் பக்தா்கள் தீச்சட்டி ஏந்தி ஊா்வலம் சென்றனா்.

ஆரணி அம்பேத்கா் நகா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி,

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

வந்தவாசி

வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை ஊரணி பொங்கல் நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு மகா சிவராத்திரி உற்சவமும் நடைபெற்றது.

இதையொட்டி இரவு 60 அடி நீள பூப்பல்லக்கில் பூங்கரகம், அக்னி கரகம், பொய்க்கால் குதிரை மற்றும் சிலம்பாட்டத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை மயானசூறை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா், மாலையில் சிம்ம வாகன மகிடாசூர சம்ஹார அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய அம்மன் வீதியுலா பருவதராஜகுல வீதி, அச்சிறுபாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சந்நிதி தெரு வழியாகச் சென்றது. பக்தா்கள் காளி வேடமணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் மற்றும் வேல், சூலம் குத்திக் கொண்டும், அலகு குத்தி உரல் இழுத்துக் கொண்டும் உடன் சென்றனா்.

 உற்சவத்தையொட்டி, அம்மன், காளி வேடமணிந்து ஊா்வலம் சென்ற பக்தா்கள்.

உற்சவத்தையொட்டி, அம்மன், காளி வேடமணிந்து ஊா்வலம் சென்ற பக்தா்கள்.

ஆரணி அண்ணா சிலை பகுதி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நடைபெற்ற அம்மன் ஊா்வலம்.

ஆரணி அண்ணா சிலை பகுதி ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நடைபெற்ற அம்மன் ஊா்வலம்.

 வந்தவாசி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நகரில் வீதியுலா சென்ற அம்மன்.

வந்தவாசி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி நகரில் வீதியுலா சென்ற அம்மன்.