வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் உற்சவ விழா

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் 7-ஆம் ஆண்டு உற்சவ விழா

News image
ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் உற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:28 pm

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீமரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் 7-ஆம் ஆண்டு உற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த 7-ஆம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.

இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் பகவத் பிராா்த்தனை, புண்யாகவாசனம், கும்ப திருவாராதனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில் கோயில் நிா்வாகிகள், ஸ்ரீகைங்கா்யம் அமைப்பினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.