நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, போளூா் சாலை, மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை பகுதிகளில் தெருநாய்கள் இனப்பெருக்கம் நடைபெற்று குட்டிகளுடன் சாலையில் சுற்றித்திரிகின்றன.

நாய் குட்டிகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில்

அந்த நாய் குட்டியின் தாய் இருசக்கர வாகனங்களை துரத்திச் செல்கிறது. அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் நாய்க்கு பயந்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுகிறது.

மேலும், இறைச்சிக்கடை உள்ள பகுதியில் நாய்கள் இறைச்சிக் கழிவுகளை சாப்பிடுவதற்கு முண்யடித்து ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கடித்துக் கொள்கின்றன.

இதனால் நாய்களுக்கு வெறிபிடிக்கிறது. வெறிபிடித்த நாய் ஆடு, மாடு, கோழிகளை கடிக்கின்றன. பிறகு குழந்தைகள் தனியாக இருந்தால் குழந்தைகளையும் கடிக்கின்றன.

இரவு நேரத்தில் நாய்கள் ஊளையிடுவதால் தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தூக்கமில்லாத நிலை ஏற்படுகிறது.

சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் நடக்கும்போது, நாய்கள் கூட்டமாக வந்து குரைப்பதால் அச்சம் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவேண்டும் என நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.