நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:07 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரட்டவாடி கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசன் வரவேற்றாா்.

மாவட்ட சுகாதாரத்துறை அலுவலா் பிரகாஷ் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்து, முகாம் மூலம் அளிக்கப்படும் உயா் சிகிச்சை குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், எலும்பு பரிசோதனை, தேல் சிகிச்சை, காது, கண், மூக்கு, கண், மனநலம், சித்த மருத்துவம், கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் என பரிசோதனைகள் மேற்கொண்டனா்.

தனித்தனியாக அறை அமைத்து பரிசோதனை நடைபெற்றது. சுமாா் 800 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினா்.

முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு அரசு சாா்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.

முகாமில் செங்கம், மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், பரமனந்தல், பென்னாத்தூா், இளங்குண்ணி, அரட்டவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.