ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து பயணிகள் நிழற்கூடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
ஆரணி - வாழப்பந்தல் சாலையில் மேல்சீசமங்கலம் கிராமத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கி புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் எம்.அரங்கநாதன் வரவேற்றாா்.
மேலும் ஆரணி ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் வாசு, கவிதாபாபு, செல்விதாஸ், இலக்கிய அணி ஒன்றியச் செயலா் சங்கா், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலா் வெளுமாந்தாங்கல் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இளைஞா் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாா் செய்திருந்தாா்.
தொடர்புடையது

வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில் மமக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

கே.வி. குப்பம் திமுக வேட்பாளா் அறிமுகம்

மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


