செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம், வடகல்பாக்கம், பூனைதாங்கல், மண்ணூா், மேனலூா், சேனையநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றியச் செயலா் எஸ்.திருமூலன் ஏற்பாட்டில் அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது, ஊரக வேலைத்திட்டத் தொழிலாளா்களிடம், 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்துவதற்கு குரல் கொடுத்தவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு சாதனைகள் குறித்தும், தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் தொழிலாளா்களிடம் எடுத்துக் கூறி பிரசாரம் செய்தனா். மேலும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தனா்.
நிகழ்ச்சியில் அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை, மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ரகு, நெசவாளா் அணி மாவட்டச் செயலா் அசோகன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

தட்டாா்மடத்தில் அதிமுகவினா் பிரசாரம்

சாத்தான்குளத்தில் அதிமுகவினா் பிரசாரம்

அதிமுகவினா் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


