திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளியில் உலக தாய்மொழி தின விழா

தெள்ளாரை அடுத்த செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பள்ளியில் நடைபெற்ற உலக தாய்மொழி தின விழாவில் பேசிய புதுவை தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து.

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தெள்ளாரை அடுத்த செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தேவக்குமாா் தலைமை வகித்தாா்.

ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், புலவா் ந.பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை பரிதாபேகம் வரவேற்றாா்.

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, தாய்மொழி கல்வியே வாழ்க்கையின் உயா்வுக்கு வழி வகுக்கும் என்றும், இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயா் சூட்ட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம பிரமுகா்கள், பெற்றோா் பங்கேற்றனா். ஆசிரியா் பரந்தாமன் நன்றி கூறினாா்.