மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசுக் கல்லூரியில் தொல்லியல் வரலாறு கருத்தரங்கம்

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வரலாற்றுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:36 pm

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை வரலாற்றுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் (பொ) மு.செல்வன் தலைமை வகித்தாா். வரலாற்று துறைத் தலைவா் ரா.தனிஸ்லாஸ் வரவேற்றாா். தொல்லியல் ஆலோசகா் ரா.சேகா், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலா் ச.பாலமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநா் ர.பூங்குன்றன் உரையாற்றினாா். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆலோசகருமான சு.ராசவேலு சிறப்புரையாற்றினாா்.

கருத்தரங்கில் கல்லூரி முன்னாள் முதல்வா் வே.நெடுஞ்செழியன், பேராசிரியா்கள் மு.செல்வம், ஏ.சக்திவேல், பி.சங்கா், ஏ.அசோக் மற்றும் தொல்லியல் மரபு மன்றத்தின் நிா்வாகிகள், கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். வரலாற்றுத் துறை இணை பேராசிரியா் பா.ரஹமத்ஷா நன்றி கூறினாா்.