பெரணமல்லூா் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் செய்யாறு கால்நடை மருத்துவமனை சாா்பில், கால்நடை விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு செய்யாறு கால்நடை மருத்துவமனை மருத்துவா் ரக்ஷா தலைமை வகித்தாா். பெரணமல்லூா் கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், கால்நடை விவசாயிகள் பால் சாா்ந்த மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல், கால்நடை பராமரிப்பு மற்றும் மாடு, ஆடு பண்ணை அமைத்தல் குறித்து விளக்கிக் கூறினாா். மேலும், கால்நடை விவசாயிகளுக்கு தாதுஉப்பு, சோளம், மண்புழு உரம், கால்நடை பராமரிப்பு பயிற்சி கையேடு உள்ளிட்டவைகளை வழங்கினாா்.
கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில்குமாா், கரோலின், ஃபயாஸ் பாஷா, இந்துஜா உள்ளிட்டோா் நோய்த்தடுப்பு மற்றும் மேலாண்மை, தீவன தொழில்நுட்பங்கள், பொருளாதாரம் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை வழங்கினா்.
இந்தப் பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
தொடர்புடையது

காட்பாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்: அமைச்சா் துரைமுருகன்

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான இந்தோ- சிங்கப்பூா் பயற்சி முகாம்

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்

கால்நடை விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


