எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்

ஏரிக்குப்பம் ஊராட்சியில் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

News image

ஏரிக்குப்பம் ஊராட்சியில் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :20 பிப்ரவரி 2026, 6:37 pm

போளூா் ஒன்றியம், ஏரிக்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பக்தா்கள் சாா்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 16-ஆம் தேதி கணபதி, லட்சுமி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை 6-ஆம் கால யாக பூஜை, ஹோமம், விசேஷ திரவ்யம் சமா்பணம், மஹா சங்கல்பம், மஹா பூரணாஹுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நடைபெற்ற பின்னா், வரசித்தி விநாயகா் சந்நிதி விமானம், கோயில் கோபுர கலசங்களுக்கும், மூலவா் யந்திர ஸ்ரீசனீஸ்வர பகவான், தாயாா் சாயாதேவிக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், எம்.எஸ்.தரணிவேந்தன்எம்.பி., ஆரணி கோட்டாட்சியா் சிவா, திமுக ஒன்றியச் செயலா் மகேஷ், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் ஏரிக்குப்பம், ஆரணி, போளூா், களம்பூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

Story image