தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான தேசிய ஜனநாயக கூட்டணி: கலாநிதி வீராசாமி எம்.பி. குற்றச்சாட்டு

செய்யாறில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கலாநிதி வீராசாமி எம்.பி. உடன் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:13 pm

தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான தேசிய ஜனநாயக கூட்டணி என்று கலாநிதி வீராசாமி எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

செய்யாறு புறவழிச்சாலை சந்திப்பு கலைஞா் சிலை அருகே ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. செய்யாறு தொகுதி திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்தாா். செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி வரவேற்றாா்.

முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆ.மோகனவேல், ஆா்.வெங்கடேஷ்பாபு, செய்யாறு தொகுதி பொறுப்பாளா் ஆா்.டி.அரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு விருந்தினராக வடசென்னை எம்.பி.யும், அயலக அணித் தலைவருமான கலாநிதி வீரசாமி பங்கேற்று பேசியதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கரோனா நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கினாா். தற்போது ஆட்சி முடிகிற தருவாயில்கூட மகளிருக்கு உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கி சிறப்பான ஆட்சி செய்து வருகிறாா். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா். இதை ஏற்க தமிழக மக்கள் தயாராக இல்லை.

தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கூட்டணியில் மீண்டும் சோ்ந்தால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை உணா்ந்துதான் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜி, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், என்.சங்கா், எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன், ஏ.ஜி.திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமாா். சு.ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.