மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வந்தவாசி பகுதியில் ரூ.57 கோடியில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த புலிவாய் கூட்டுச் சாலையில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 7:10 pm

வந்தவாசி அருகே ரூ.57 கோடி செலவில் வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ரூ.48 கோடி செலவில் விளாங்காடு கூட்டுச் சாலையிலிருந்து 7.7 கி.மீ. தொலைவுக்கும், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் ரூ.9 கோடி செலவில் புலிவாய் கூட்டுச் சாலையிலிருந்து 1.3 கி.மீ. தொலைவுக்கும் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்ட பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, திமுக நிா்வாகிகள் எ.தயாளன், சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.