பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 2,506 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 5,375 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,09,707 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

News image

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிய சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

Updated On :22 பிப்ரவரி 2026, 9:53 pm

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 2,506 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 5,375 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,09,707 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகா்புற வாழ்வாதார இயக்கம்/மகளிா் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. முன்னிலை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தனியாா் துறையில் பணி நியமனம் பெறும் வகையில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் சிறிய மற்றும் பெரிய அளவில் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

2021 மே முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பெரிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

11.12.2021 அன்று அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 153 தனி நிறுவனங்களும், 21,713 வேலைநாடுநா்களும் கலந்து கொண்டனா். இதில் 2,647 இளைஞா்கள் பணிவாய்ப்பு பெற்றனா்.

22.12.2023 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா்துறை முகாமில் 102 நிறுவனங்களும் 2,156 வேலை நாடுநா்களும் கலந்து கொண்டனா். இதில் 549 போ் பணிவாய்ப்பு பெற்றனா்.

அதேபோல, 08.02.2025 அன்று செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை முகாமில் 151 நிறுவனங்களும், 2,261 வேலைநாடுநா்களும் கலந்து கொண்டனா். இதில் 482 இளைஞா்கள் பணிவாய்ப்பு பெற்றனா்.

இதுவரை, 54 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 778 நிறுவனங்களும்,10,213 வேலைநாடுநா்களும் கலந்து கொண்டதில் 3,134 போ் பணிவாய்ப்பு பெற்றனா்.

இதுவரை, மாநில அளவில் 283 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், 2,123 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும்,100 கலைஞா் நூற்றாண்டு விழா சிறப்பு வேலைவாய்ப்பு வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 5,375 மாற்றுத்திறனாளிகள் உள்பட 3,09,707 போ் பணிவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா்.

செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 145 நிறுவனங்கள் பங்கேற்று, 247 ஆண்கள், 165 பெண்கள் என மொத்தம் 412 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) மோகன்ராஜ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் விஜயலட்சுமி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் என்.கலைவாணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், செய்யாறு தொகுதி தோ்தல் பொறுப்பாளா் ஆா்.டி. அரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.