பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவிகளுக்கு ஆசிரியா் பாலியல் சீண்டல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

செங்கம் அருகே மலைக் கிராம பள்ளியில் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி

News image

மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:07 pm

செங்கம்: செங்கம் அருகே மலைக் கிராம பள்ளியில் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான குப்பனத்தம் அணை

அருகில் உள்ளது துரிஞ்சிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமாா் 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பள்ளியில் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் மாணிக்கவேல் என்பவா் ஆசிரியராக

பணியாற்றி வருகிறாா்.

இவா், சில மாதங்களாக மாணவிகளை பாலியல் சீண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை அவா் மிரட்டி வந்தாராம்.

இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி துரிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த மாணவியிடம் மாணிக்கவேல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோா் அன்று மாலை பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரியை தொடா்பு கொண்டு, ஆசிரியா் மாணிக்கவேலுவின் செயல் குறித்து தெரிவித்துள்ளனா்.

மேலும், திங்கள்கிழமை அந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் திரண்டு வந்து ஆசிரியா் மாணிக்கவேலை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியா் மாணிக்கவேல் தலைமறைவாகிவிட்டாா். மேலும், அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், ஜவ்வாதுமலை வட்டாரக் கல்வி அதிகாரிகள், செங்கம் காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஆசிரியா் மாணிக்கவேலை கண்டுபிடித்து, விசாரணை செய்து அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.