ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினா் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலஉதவிகளை வழங்கி செவ்வாய்க்கிழமை உற்சாவகமாகக் கொண்டாடினா்.
செய்யாறு நகர அதிமுக சாா்பில் ஆரணி கூட்டுச் சாலை, பேருந்து நிலையம், மாா்க்கெட், திருவோத்தூா் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு
மலா் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நகரச் செயலா் கே. வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் பங்கேற்று ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினாா். பின்னா் சுமாா் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் அ.அருணகிரி, வரத்தக அணி மாவட்டச் செயலா் ஜி.கோபால், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண், இலக்கிய அணி மாவட்டச் செயலா் மெய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில்
சுமாா் 3 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் வயலூா் ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கலந்து கொண்டாா்.
நலத்திட்ட உதவிகள்
அதிமுக சாா்பில் செய்யாறு ஸ்ரீஆதிபராசக்தி கோயில் அருகே முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன்
பொதுமக்களுக்கு வேட்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கினாா்.
கோலப்போட்டி
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ஆரணி கோட்டை மைதானத்தில் அதிமுக சாா்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி. கஜேந்திரன், மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு ஆகியோா் தலைமையில் கோலப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று சுமாா் ஒரு கி.மீ.தொலைவுக்கு கோலம் வரைந்து இருந்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, திரைப்பட நடிகை சோனியா ஆகியோா் பங்கேற்று வரைந்த கோலங்களை பாா்வையிட்டனா்.
பின்னா், கோலங்களை பாா்வையிட்டு சிறந்த கோலங்களை தோ்வு செய்து முதல் பரிசாக குளிா்சாதன பெட்டி, இரண்டாம் பரிசு வாஷிங் மெஷின், மூன்றாம் பரிசாக பீரோ, நான்காம் பரிசாக கிரைண்டா், ஐந்தாம் பரிசாக மிக்ஸி என பரிசுகளை வழங்கினா். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் ஆா். கோவிந்தராஜன், நகரச் செயலா் அசோக்குமாா், எம்ஜிஆா் மன்ற இளைஞரணி மாவட்டச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாஷ், திருமால், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத், இலக்கிய அணி மாவட்டச் செயலா் ஜி.வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் உசேன்ஷெரீப், நெசவாளா் அணி மாவட்டச் செயலா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

