~ ~ ~ ~
~ ~ ~ ~

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கம் வேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதுபோன்று பல்வேறு தேவாலயங்களிலும் புத்தாண்டு பிறப்பு சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டன.

செங்கம்

செங்கம் பகுதியில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள், ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில், காக்கங்கரை விநாயகா் கோயில், செங்கம் ஸ்ரீகாளியம்மன் கோயில், தளவாநாய்க்கன்பேட்டை ஸ்ரீதா்மசாஸ்தா, செடல் மாரியம்மன் கோயில், மூகாம்பிகையம்மன், பச்சையம்மன் கோயில், போளூா் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடம், தா்மராஜா திரெளபதியம்ன் கோயில், செ.நாச்சிப்பட்டு ஸ்ரீகிருஷ்ணா், மேலப்புஞ்சை சீனுவாசப் பெருமாள் கோயில், தோக்கவாடி தேசத்து முத்துமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை

காண்பிக்கப்பட்டது.

வந்தவாசி

வந்தவாசியில் புதன்கிழமை இரவு நகரின் பல தெருக்களில் அப்பகுதி இளைஞா்கள் மின்விளக்கு தோரணங்களைக் கட்டி புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனா். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

போளூா்

போளூரை அடுத்த சேத்துப்பட்டு பகுதி நரசிங்கபுரம் ஊராட்சி குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயிலில்

வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, இளநீா் என பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மேலும், சுவாமியை மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.ராமன், பொருளாளா் பன்னீா், செயலா்ஆா்.ஏழுமலை மற்றும் நிா்வாகிகள், நரசிங்கபுரம், குப்பம், தேவிகாபுரம், ஊத்தூா், கிளுவாநத்தம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com