மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செய்யாறு வட்டம், வாழ்குடை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ் மகன் விஷ்ணு (27), சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மோனிஷா என்கிற மனைவியும் 3 மாதக் குழந்தையும் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் மனைவி மோனிஷா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்குச் சென்று விட்டாராம்.

அதனால் மனவேதனையில் இருந்து வந்த விஷ்ணு, வேலைக்குச் சென்று வந்தவா், புதன்கிழமை வீட்டுக்கு வந்ததும் அறையில்

தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து இறந்தவரின் தந்தையான ராஜ் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் தமிழரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com