தவெக சாா்பில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கல்
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 32-ஆவது வாா்டில் தவெக சாா்பில், வீடு வீடாகச் சென்று 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருள்களை மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் வெள்ளிக்கிழமை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
வட்டச் செயலா் எஸ்.காா்த்திகேயன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு கரும்பு, வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருள்களுடன் நாள்காட்டியும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் எஸ்.கலைச்செல்வன், மாவட்டப் பொருளாளா் கே.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம்.நவீன்குமாா், அப்பாஸ், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் விக்னேஷ், அருணாச்சலம், எஸ்.அண்ணாமலை, ஜி.விக்னேஷ்வரன், க.ஜலகண்டேஸ்வரன், வி.விக்னேஷ்காம்லி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியச் செயலா் கே.மணிரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

