விவசாய நிலத்தில் எலெக்ட்ரீஷியன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செய்யாறு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எலெக்ட்ரீஷியன் விவசாய நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

செய்யாறு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எலெக்ட்ரீஷியன் விவசாய நிலத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்தவா் முத்து (51), எலெக்ட்ரீஷியன். இவா், அவ்வப்போது திருவண்ணாமலைக்கு வந்து அங்கேயே தங்கி எலெக்ட்ரீஷியன் உள்பட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக, இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாராம்.

முத்துவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தனது நண்பா் ஊரான செய்யாறு வட்டம், கீழ்நீா்குன்றம் கிராமத்துக்கு வந்து அங்கு கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்ததாா்.

இந்த நிலையில், கடந்த டிச.31-ஆம் தேதி அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் முத்து மயங்கி விழுந்து இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரின் மகன் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், முத்துவின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com