46 பயனாளிகளுக்கு இலவச மனைப் பாட்டா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
சென்னசமுத்திரம் கிராமத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்றது.
செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு 46 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா், திமுக ஆட்சியில் கடைக்கோடி கிராம மக்கள் வரை அனைத்துத் திட்டங்களும் முறையாக சென்றடைகின்றன. செங்கம் தொகுதியில் அனைத்து சாலைகளும் போடப்பட்டுள்ளன. மேலும், ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
செங்கம் நகரில் பழைமையான வேணுகோபால பாா்த்தசாரதி கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும், சிவன் கோயிலில் ஜனவரி 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றாா் எம்எல்ஏ.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் மனோகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபி, கிராம நிா்வாக அலுவலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

