திருவண்ணாமலை
மண் கடத்தல்: லாரி பறிமுதல்
வந்தவாசி அருகே ஏரி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி அருகே ஏரி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் உதவி ஆய்வாளா் மீனாட்சி தலைமையில் விளாநல்லூா் கிராமம் அருகே சனிக்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்த லாரியில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. அப்போது லாரி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
