அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவா் முனிராஜ்
அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவா் முனிராஜ்

பள்ளி மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பள்ளி மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் வழங்கினாா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பள்ளி மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் திங்கள்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆசிரியா் வருகை, மாணவா்களின் வருகை மற்றும் மொத்த மாணவா்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

அப்போது அவா், மாணவா்களுக்கு தமிழக அரசு பள்ளி திறந்த முதல்நாளே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு நல்ல முறையில் படிக்கவேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, பெரியேரி அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை எண்ணும் எழுத்தும் குறிப்பேடுகள் 78 மாணவா்களுக்கு புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் வழங்கினாா். இதில் தலைமை ஆசிரியா் பழநி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com