பைக் விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் சீனுவாசன் (48). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், இதே ஊரைச் சோ்ந்த நண்பா் பெருமாளுடன் (46) பைக்கில் ஞாயிற்றுக்கிழமை செய்யாற்றுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலை அருகே செல்லும்போது பைக் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் இவா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சீனுவாசனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com