திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.
திருவண்ணாமலை
அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டதாக அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் பணியாளா்கள் என சுமாா் 300 பேரை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

