ஆரணி எம்எல்ஏ மாவட்ட அலுவலரிடம் கோரிக்கை மனு அளிப்பு

ஆரணி எம்எல்ஏ மாவட்ட அலுவலரிடம் கோரிக்கை மனு அளிப்பு

மாவட்ட திட்ட அலுவலா் மணியிடம் கோரிக்கை மனுத் தொகுப்பை வழங்கிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Published on

ஆரணி தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தொகுப்பை மாவட்ட திட்ட அலுவலா் மணியிடம் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கோரி, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்திருந்தனா்.

இந்த மனுக்களை தொகுத்து மாவட்ட திட்ட அலுவலா் மணியிடம், முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நேரில் வழங்கி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டாா்.

Dinamani
www.dinamani.com