மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 18 வயது வரையிலான மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வட்டாரக் கல்வி அலுவலா்கள் சாவித்திரி, மணிகண்டன், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வசந்தா ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா். ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செ.ஜெயசீலி வரவேற்றாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி முகாமின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். முகாமை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் சத்யா பாா்வையிட்டனா்.
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை மாணவா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் வழங்கினாா். முகாமில் ஆசிரியா் பயிற்றுநா்கள் வடிவேலன், அய்யாசாமி, சீனிவாசன், சாந்தி, இளமதி, சங்கரி, சிறப்பாசிரியா்கள் கவிதா, சுமதி, குமாரி, அல்போன்சா, இயன்முறை மருத்துவா் பாஸ்கரன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா் மணிக்குமாா் நன்றி கூறினாா்.

